இப்போது
அவர் புகழின் உச்சத்தில் இருக்கிறார்.
இருந்தாலும், யார் எப்போது வேண்டும்
என்றாலும் அவரைப் போய்ப் பார்க்கலாம்.
அவரிடம் நல்ல ஓர் அழகான
குணம் இன்றும் இருக்கிறது.
அவரின்
முதல் கேள்வி என்ன தெரியுமா. ‘சாப்பிட்டீங்களா… போய்
சாப்பிட்டு வாங்க… காசு இருக்கா…
நான் உங்களுக்காக காத்து இருக்கேன்… வயிற்றுக்கு
துரோகம் செய்யக் கூடாது…’ என்பார்.
அவரிடம் இப்போதும் எப்போதும் இருக்கும் ஓர் ஆதர்சனமான விருந்தோம்பல்
இலக்கணம்.
![]() |
நேதாஜி அஞ்சல் தலை |
இவரின்
பதின்ம வயதில் இரத்தினவேலு, செல்வராஜு,
நாதன், சண்முகம் போன்ற நல்ல அருமையான
நண்பர்கள் கிடைத்தனர். அவர்களின் மூலமாக இந்திய தேசிய
இராணுவத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்து
கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. விடிய விடிய நேதாஜியைப்
பற்றிய பேச்சு.
ஆக, நேதாஜியின்
வீர வசனங்கள்தான் அவருடைய வாழ்க்கையையே மாற்றி
அமைக்கும் என்பது அப்போது அவருக்கும்
தெரியாது. அவருடைய நண்பர்களுக்கும் தெரியாது.
இரண்டாம்
உலகப் போரின் போது, இந்திய
தேசிய இராணுவத்தினரின் விடுதலை உணர்வுகள் சோமசுந்தரத்தைப்
பெரிதும் பாதித்தன. அவருடைய பதின்ம வயது
இலட்சியங்கள், பால்ய கனவுகளாய்ப் பொங்கி
வழிந்தன.
வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்கின்ற
இளமையின் உத்வேகம் அவருக்குள் ஆறாய்ப் பெருக்கெடுத்தது. தடைகளைத்
தாண்டியும் ஓடியது.
No comments:
Post a Comment