கடுமையான
இராணுவப் பயிற்சிகள் அவருக்கு நல்ல ஒழுங்குமுறைகளைக் கற்றுத்
தந்தன. ஓர் இக்கட்டானச் சூழ்நிலையில்
உடனடியாகத் துணிந்து ஒரு முடிவு எடுப்பதற்கும்,
அதே சமயத்தில் விரைவாக முடிவு எடுப்பதற்கும்
அந்த இராணுவப் பயிற்சிகள் உற்றத் தோழனாகக் கைகொடுத்து
வருகின்றன என்று சொல்லலாம். அது
மிகை இல்லை. அதற்கு ஓர்
எடுத்துக்காட்டு.
புக்கிட்
சீடிம் தோட்டத்தை வெள்ளைக்காரர்கள் விற்றுவிட்டார்கள். தொழிலாளர்களை ‘அம்போ’ என்று விட்டுவிட்டுப்
போகின்றார்கள். அப்போது, அந்தத் தோட்டத்தின் நிர்வாகியாக
டான்ஸ்ரீ சோமா இருக்கின்றார்.
எப்படியாவது அந்தத் தோட்டத்தை வாங்க
வேண்டும். தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்று நினைத்தார்.
அந்தத்
தூண்டுதல் புரட்சி ஏற்படுவதற்கு அவரின்
பழைய இராணுவப் பயிற்சிகளே காரணம் என்று சொல்ல
வேண்டும். அதுவும் ஒரு Domino Effect எனும்
தொடர் விளைவுதானே. அதன் பிரதிபிம்பம்தான் தேசிய
நிலநிதிக் கூட்டுறவுச் சங்கமாக உருவெடுத்தது.
![]() |
1945இல் இந்திய தேசிய இராணுவத்தில் வீரராக இருந்த போது |
அவர்
துன் சம்பந்தனைச் சந்தித்தது; பத்துப் பத்து வெள்ளியாக
சேர்த்தது; பல தோட்டங்களை வாங்கிப்
போட்டது; தேசிய நிலநிதிக் கூட்டுறவுச்
சங்கத்தை உலகளாவிய நிலைக்கு உயர்த்தியது; பல ஆயிரம் பேர்களுக்கு
வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது; மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கு
நிதியுதவி செய்தது; நூற்றுக்கணக்கான தோட்டப் பாட்டாளிகளின் பிள்ளைகளைப்
பட்டதாரிகளாக ஆக்கியது. அவை எல்லாம் வரலாற்றுச்
சுவடிகள்.
No comments:
Post a Comment