Saturday 15 September 2012

டான்ஸ்ரீ சோமா அரங்கம் - 17


தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி எழுத்தாளர்களுக்குப் பரிசுகள் வழங்கி, மலேசியத் தமிழ் எழுத்துலகத்திற்கு, டான்ஸ்ரீ சோமா நல்ல சேவைகளைச் செய்து வருகின்றார். தமிழ்வேள் கோ.சாரங்கபாணி ‘தமிழர் திருநாள்’ நிகழ்வுகளுக்கு தமிழ் அறிஞர்களை இந்த நாட்டிற்கு அழைத்து வந்து போது, டான்ஸ்ரீ சோமாவும் அவர்களை நன்கு உபசரித்து நிகழ்ச்சிகள் நடத்துவார்.


தமிழை மட்டுமே வீட்டில் பேசிக் கொள்ளும் மலேசியக் குடும்பங்களில் டான்ஸ்ரீ சோமாவின் குடும்பமும் ஒன்று. டான்ஸ்ரீ சோமா அரங்கத்தைப் பற்றி எழுத்தாளர் கே.பாலமுருகன் இப்படி சொல்கிறார். ‘கோலாலம்பூரில் இருப்பவர்களுக்கும் சரி. மற்ற ஊர்களில் இருந்து வருபவர்களுக்கும் சரி. குறிப்பாகத் தமிழர்களுக்கு டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர்.சோமா அரங்கம்தான் அவர்களின் நிகழ்ச்சிகளுக்குப் பயன்படும் மிகச் சிறப்பான இடமாக அமைகின்றது.


அதற்கு மற்றொரு காரணமும் உண்டு. இடத்தைப் பயன்படுத்த விரும்புபவர்கள், நேராக நல்ல மனம் படைத்த டான்ஸ்ரீ டத்தோ சோமசுந்தரம் அவர்களிடமோ, மற்றொரு நல்ல மனிதரான டத்தோ சகாதேவன் அவர்களிடமோ சென்று, எப்படியாவது அந்த மண்டபத்தை வாடகை இல்லாமல் பெற்றுக் கொள்வார்கள். சில நேரங்களில் குறைந்த வாடகை கொடுத்தும் பெற்றுக் கொள்வார்கள்


இந்த நல்ல காரியத்தை அந்த நிர்வாகம் பல வருடங்களாகச் செய்து வருகிறது. அவர்களுக்கு நம் இந்தியச் சமுதாயம், குறிப்பாக நூல் வெளியீடுகள், இலக்கிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் இதர பல நிகழ்ச்சிகள் நடத்தி வரும் கலைஞர்களும் தனியார் இயக்கங்களும் நன்றிக் கடன் பட்டுள்ளனர்.’ என்ன சொலவது. நன்றி டான்ஸ்ரீ! நன்றி சகா!


டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் கே.ஆர். சோமசுந்தரம் - புவான்ஸ்ரீ டத்தின் எஸ். லோகநாயகி தமபதியரின் எண்பதாம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா (சதாபிஷேகம்) 01.03.2010இல் சென்னை அடையாறு சாஸ்திரி நகர் விஜயராஜா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மலேசிய மனங்களின் வாழ்த்துகள்.

சுங்கை சிப்புட் தோட்டத்தில் துன் சம்பந்தனுடன் டான்ஸ்ரீ சோமா
உலகத் தமிழர்களுக்கு நல்லது செய்து வரும் டான்ஸ்ரீ சோமசுந்தரம் அவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். அதுவே மலேசிய இந்தியர்களின் பிரார்த்தனையும்கூட

எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!

No comments: