டான்ஸ்ரீ
சோமா சிங்கப்பூரில் இருந்து 1947ஆம் ஆண்டில், மலாயாவிற்குத்
திரும்பினார். பாகான் செராய் புறநகரில்
கணக்கர் வேலை கிடைத்தது. அங்கே
இருந்த இந்திய தேசிய இராணுவ
நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு மலேசிய இந்தியர்
காங்கிரஸ் கிளையை நிறுவினார். இந்தியர்களின்
அரசியலுக்கு அறிவோம் என்று ஒரு
முதல் பிள்ளையார் சுழி. அதன் பின்னர் பலப்
பல சமூக சேவைகளில் தொடர்ந்து
ஈடுபட்டார்.
1950களில்தான் டான்ஸ்ரீ சோமாவின் அரசியல் பணிகள் தீவிரம்
அடைந்தன. கெடா மாநிலத்தில் கூலிம்
நகரம் இருக்கிறது. அருகாமையில் புக்கிட் சீடிம் தோட்டம். அங்கு
பணியாற்றத் தொடங்கிய காலத்தில், அவரால் அரசியலில் முழுமையாகச்
செயல்பட முடியாமல் போனது.
![]() |
புக்கிட் சீடிம் தோட்டத்தில். நடுவில் அரைக்கால் சட்டையுடன் கே.ஆர். சோமசுந்தரம் |
அதற்கு
காரணம், அப்போதைய நெருக்கடியான அரசியல் நிலைமை. கம்யூனிஸ்டுத்
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், கழுத்தை நெரிக்கும் வெள்ளையர்களின்
கெடுபிடிகள் போன்றவற்றைச் சொல்லலாம்.
தன்னுடைய
20ஆவது வயதில் புக்கிட் சீடிம்
தோட்டத்தின் தலைமை எழுத்தராகப் பதவியில்
சேர்ந்தார். தலைமை எழுத்தர் என்றால்
அப்போதைய வழக்கில் பெரிய கிராணி. அப்போதைய
அவருடைய வயதிற்கும், அவருக்கு கிடைத்த பதவிக்கும் ஒரு
பெரிய நீண்ட இடைவெளி (Gap) இருப்பதை,
உங்களால் உணர முடிகிறதா!
No comments:
Post a Comment