Saturday 15 September 2012

வணிகவியல் படிப்பு - 14

1967 ஆம் ஆண்டில் கெடா மாநில மக்களவைப் பிரதிநிதியாக, தேசிய அளவில் செனட்டர் பதவியில் அமர்த்தப்பட்டார். இந்த ஆண்டில்தான் அவருடைய தந்தையும் அமரர் ஆனார். பின்னர், 1973 ஆம் ஆண்டு டான்ஸ்ரீ சோமா தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தில், அதன் பொது நிர்வாகியாகப் பொறுப்பேற்றார்.


பொதுவாக, இன்றைய அளவில் எல்லா இன மக்களுக்கும் பயன் தரும் சேவைகளை டான்ஸ்ரீ சோமா வழங்கி வருகிறார். குறிப்பாக, தமிழர்கள் பயன் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்

கூலிமில் நிர்வாகியாக இருந்த போது
தோட்ட நிர்வாகப் பொறுப்பிலும் இருந்தார். அதேசமயம் இலக்கிய அறிவையும் வளர்த்துக் கொண்டார். சூன் லீ தோட்டத்தில் உதவி எழுத்தராகப் பதவியில் இருந்த போது சேவிகா என்ற பத்திரிகையில் சிறுகதைகள் எழுதியுள்ளார். நடிகை மாலதி என்ற தலைப்பில் ஒரு கதை. இன்றும் மறக்க முடியாத கதை என்றும் சொல்கிறார்.


அதே தோட்டத்தில் பணி புரியும் போது வணிகவியல் தொடர்பான படிப்பை அஞ்சல் வழியாகத் தொடர்ந்தார்.  British Engineering Institute of Technology எனும் கல்வி நிறுவனத்தில் வணிகவியல் படித்தார். அவருக்கு இளம் வயதிலேயே ஒரு விமான ஓட்டி ஆக வேண்டும் என்பது ஓர் இலட்சியக் கனவு. ஆனால், அது நிறைவேறவில்லை. அவருக்கு அது ஓர் ஏமாற்றம். ஆனால் விண்வெளி மேதை அதிபர் அப்துல் கலாமிடம் ஒரு பெரிய விருதை வாங்கி வந்துவிட்டாரே. அதுவரை மகிழ்ச்சி


மேலே பறக்க அவர் கனவு கண்டார். முடியவில்லை. ஆனால், இப்போது அவருடைய புகழ் நிலத்தின் மேலேதானே பறந்து கொண்டு இருக்கின்றது. அப்போது அது ஒரு கனவு. இப்போது இது ஒரு நனவு.

No comments: