Friday 7 September 2012

இந்தி மொழி ஆற்றல் - 8


ழுங்குமுறைகளின் அஸ்திவாரமே இராணுவப் பயிற்சிகளில் இருந்துதான் தொடங்குகின்றன என்பதை உறுதியாகச் சொல்லலாம். பெரும்பாலும், இராணுவத் தலைமை அதிகாரிகள் அறிவுஜீவிகளாகத்தான் இருப்பார்கள்.  

இருந்தாலும் டான்ஸ்ரீ சோமாவிடம் இயற்கையாக இருந்த அறிவாற்றலும் சமூக உணர்வுகளும், இராணுவப் பயிற்சிகளினால் மேலும் செப்பனிடப்பட்டன.
நேதாஜி சிங்கப்பூரில் தன் படையினரைப் பார்வையிடுகிறார்
சிங்கப்பூரில் பயிற்சியில் இருந்த போது, நேதாஜியைப் போன்ற பெரும் தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அவர்களின் பேச்சுகளைக் கேட்கும் வாய்ப்புகளும் கிடைத்தன. அந்தப் பேச்சுக்கள் அவரின் விடுதலை உணர்வுகளைத் தூண்டின. தூய்மையான சிந்தனைகளுக்கு கற்பூரம் காட்டின

சிங்கப்பூரில் இந்திய தேசிய இராணுவம்
இந்திய தேசிய இராணுவத்தில் சேவையாற்றிய போது இந்தி மொழி ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அது அவருக்கு ஒரு பெரியபிளஸ் பாயிண்ட்’. உங்களுக்கு ஒன்று தெரியுமா. டான்ஸ்ரீ சோமா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், மலாய், இந்தி மொழிகளில் புலமைப் பெற்ற ஒரு பன்மொழிக் கலைஞர். இந்தத் தகவல் சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது

அசாட் ஹிந்த் படையினரின் போர்க் கோலம்
ஒரு முக்கியமான விசயத்திற்கு வருகிறேன். ஒரு காலக்கட்டத்தில் மலேசிய இந்தியர்கள் குடியுரிமை பெற வேண்டும் என்றால் மலாய்மொழிச் சோதனைக்கு போக வேண்டும்.  அது ஒரு கட்டாயமாக இருந்தது. அந்த மாதிரியான மொழிச் சோதனைகளை நடத்தும் குழுக்களில் டான்ஸ்ரீ சோமாவும் இருந்தார். தேசிய, மாநில, மாவட்ட அளவில் பொறுப்புகளையும் வகித்தார்

No comments: