Thursday 6 September 2012

சின்ன வயதில் பெரிய இழப்பு - 1

ட்டு வயதில் தாயாரை இழக்கின்றான். குடும்பத்தில் தனிமை வஞ்சகம் பேசுகிறது. பள்ளிக்கூடத்தின் தலைவாசல் மறைந்து போகிறது. மளிகைக்கடையில் வேலை. படிப்பு வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி. தடுமாற்றமான வாழ்க்கை தொடர்கிறது. 


எங்கிருந்தோ ஓர் ஜீவ ஒளி. நேதாஜியின் வீர வசனங்கள் சொப்பனங்களாக மாறுகின்றன. பதினான்கு வயதில் இராணுவ வீரனாக மாறுகிறான். அப்படியே அரசியல் அவனை அணைத்துக் கொள்கிறது. கடைசியில், புகழின் உச்சிக்கே ஏணி வைத்துப் பார்க்கின்றான். 
1957 ஆகஸ்டு 31-இல் மலாயா சுதந்திரம் அடைந்த போது
கூலிம் நகரில் சுதந்திரப் பிரகடனத்தை
கே.ஆர்.சோமசுந்தரம் தமிழில் படிக்கிறார்.
அதே சிறுவன் இன்று பல கோடிச் சொத்துக்களின் நிர்வாகத் தலைவன். பல்லாயிரம் பேர்களின் வாழ்வதாரம். கணக்குப் பார்க்காத தான தர்மங்கள். வரலாறு பேசும் நல்ல ஒரு தார்மீகவாதி. மலேசிய வரலாற்றுச் சுவடுகளில் அழியாத ஒரு கல்வெட்டு. யார் அந்தச் சிறுவன். அவன் வேறு யாரும் இல்லை. மலேசியா கண்டு எடுத்த இலக்கிய ஆர்வலன் கே.ஆர்.சோமசுந்தரம். அவன் என்ற சொல்லில் இருந்து அவர் என்று உயர்த்துகிறேன்.
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி
அவருடைய உண்மையான பெயர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் கே.ஆர். சோமசுந்தரம் பிள்ளை. அவரின் அயராத உழைப்பினால் மலேசிய அரசாங்கம் டான்ஸ்ரீ, டத்தோ, ஜே.பி சமாதான நீதிபதி விருதுகளை வழங்கியது. தன்னலமற்றக் கல்விச் சேவைகளுக்காக ஆஸ்திரேலிய அரசாங்கம் டாக்டர் பட்டம் கொடுத்தது. 
டத்தோஸ்ரீ சாமிவேலு
தளராத முயற்சிகளுக்காக பிரவாசி பாரதிய சம்மான் விருதினை இந்திய அதிபர் அப்துல் கலாம் வழங்கிச் சிறப்பிக்கிறார். இவை எல்லாவற்றையும் தாண்டி, மலேசிய இந்தியர்கள் அவருக்கு கூட்டுறவுக் காவலர் எனும் பட்டத்தைக் கொடுத்துச் சிறப்பு செய்கின்றனர். ’வாழ்ந்து காட்டு மகனே’ என்றும் வாழ்த்துகின்றனர்.

No comments: