Friday 7 September 2012

சோமசுந்தரம் பெயர் வந்த கதை - 2


பொதுவாக, யாரையும் அவ்வளவு எளிதாகப் புகழ்ந்து, புகழ்மாலை சூட்டுவது நம் வழக்கம் இல்லை. ஒருவரைப் புகழ்கிறோம் என்றால் அவர் நிச்சயமாக அந்தப் புகழ்ச்சிக்குத் தகுதி உடையவராகத்தான் இருப்பார். இதை முதலில் சொல்லிவிடுகிறேன்.

(இடமிருந்து வலம்) டான்ஸ்ரீ சோமா,
தங்கை சம்பூரணம், அண்ணன் சொக்கலிங்கம்
அதற்கு முன் ஒரு விசயம். டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் ஒரு செனட்டராக இருந்த போது, ஐக்கிய நாட்டு பொதுச்சபைக் கூட்டங்களில் மலேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதித்தவர் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும். விரல்விட்டு எண்ணக்கூடிய மலேசியத் தமிழர்களே .நாவில் கால் பதித்து இருக்கிறார்கள். அவர்களில் இவரும் ஒருவர்

அண்ணன் கே.ஆர். சொக்கலிங்கம்
1900ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து பல ஆயிரம் இந்தியக் குடும்பங்கள் மலாயாவிற்குள் புலம் பெயர்ந்தன. இந்தியப் பண்பாடுகளுக்கும் இந்தியக் கலாசாரங்களுக்கும் நிலையான அரிச்சுவடிகளை எழுதி வந்தன. அவற்றில் ஒன்றுதான் கே.எஸ். இரத்தினசாமிப் பிள்ளையின் குடும்பம். தமிழகத்தின் திருக்கோவிலூர் எனும் கிராமிய நகரில் இருந்து குடியேறிய குடும்பம்.
தாயார் அன்னக்கிளி
இரத்தினசாமிப் பிள்ளைக்கு 1921-இல் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. துணைவியாரின் பெயர் அன்னக்கிளி. இவர்களுக்கு ஐந்தாவது மகன் கே.ஆர். சோமசுந்தரம். தெலுக் இந்தானில் 1930 மார்ச் 30இல் பிறந்தார். கே.எஸ். இரத்தினசாமிப் பிள்ளையின் தாயாரின் பெயர் சுந்தரம்பாள் அம்மையார். அவரின் நினைவாகத்தான் நம்முடைய கதாநாயகனுக்கு சோமசுந்தரம் என்று பெயரும் சூட்டப்பட்டது.

No comments: