Friday 7 September 2012

சிங்கப்பூர் தொழிலாளர் சங்கம் - 9


நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு மொழிச் சோதனையில் உதவிகள் செய்து இருக்கிறார். சரி. மலாயாவில் வாழ்ந்தும் மலாய் மொழியில் பேசத் தெரியாதவர்களை என்னதான் செய்வது. சொல்லுங்கள். ஆனால், அவர்களுக்குப் பிரஜாவுரிமை வேண்டும். எல்லாமே உணர்வுகள் சம்பந்தப்பட்டவைதான்
எதிர்காலத்தைத் தேடி
ஆக, டான்ஸ்ரீ சோமா என்ன மாதிரியான உதவிகளைச் செய்து இருப்பார். இதில் முடிவு செய்வதையும் முடிவு எடுப்பதையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன். அந்த மாதிரியான நல்ல நல்ல காரியங்களை, அந்த மனிதர் அப்போதே செய்து இருக்கிறார்

கூட்டுறவு சங்கத்தை ஒப்படைக்கிறேன் - துன் சம்பந்தன்
1945இல் இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்தது. ஜப்பானியர்களின் ஆட்சியும் ஒரு முடிவுக்கு வந்தது. நேதாஜியின் இந்திய தேசிய விடுதலை இராணுவமும் கலைக்கப்பட்டதுஅதன் பிறகு டான்ஸ்ரீ சோமா இரண்டு ஆண்டுகள் சிங்கப்பூரில் இருந்தார்.  

இந்தக் காலக்கட்டத்தில் மலாயாப் புரட்சியாளர் எஸ்..கண்பதி, சிங்கைத் தொழில்சங்கவாதி வீரசேனன், லட்சுமியா போன்றவர்களின் நட்பும் அவருக்கு கிடைத்தது

சிந்தனைப் பார்வையுடன் அலுவலகத்தில்
சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர் சங்கம், Pan Malaysian Federation of Trade Union எனும் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் போன்ற சங்கங்களிலும் அவருக்கு ஈடுபாடுகள் இருந்தன. இந்தச் சங்கங்கள் நேதாஜியின் விடுதலை உணர்வுகளின் பின்புலங்களாக இயங்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: