Friday 7 September 2012

கடுமையான இராணுவப் பயிற்சிகள் - 5


சின்ன பசங்களுக்கு இருக்கும் அசட்டுத் துணிவுகள் தெரியும்தானே. அசாத்திய துணிவுகள் என்றுகூட சொல்லலாம். அவை எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து அலை அலையாய் ஆர்ப்பரித்தன. அவற்றின் பிரதிபலிப்புதான் சோமாவையும் இந்திய தேசிய இராணுவத்தில் ஐக்கியமாக்கின

அசாட் ஹிந்த் பயிற்சி முகாம்
1944 ஆம் ஆண்டு. அப்போது அவருக்கு பதினான்கு வயது. இருந்தாலும் பதினாறு வயது என்று சொல்லி, இந்திய தேசிய இராணுவத்தில் பதிந்து கொண்டார். இந்தத் தடகளப் போட்டியில் குடும்பத்தாரின் பலமான எதிர்ப்புகள். அவரை வீட்டில் போட்டுப் பூட்டியும் பார்த்தனர்

சோமாவேணும்னாஇந்தக் கடைய உன் பேர்லேயே எழுதி வச்சிடுறேன்என்று அப்பா சொல்லி பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை.  

இவரும் மசியவில்லை. தாழ்ப்பாள்தாவாரங்கள், மங்கு பானைகள் உடைந்து போனதுதான் மிச்சம். கடைசியில், இந்திய தேசிய இராணுவத்தின் கதவுகள் திறந்து கொண்டன

நேதாஜியும் உயர்மட்ட அதிகாரிகளும்
ஈப்போவுக்கு அருகில் தஞ்சோங் ரம்புத்தான் சிறுநகரம் இருக்கிறது. அங்கேதான் நேதாஜியின் பயிற்சி முகாமும் இருந்தது. அந்த இராணுவ பயிற்சி முகாமில் அவருக்கு சில மாதங்கள் பயிற்சி. அங்கே பொது அறிவு, புவியியல், வரலாறு, அறிவியல், இராணுவத் தந்திரங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன

அத்துடன் கடுமையான இராணுவப் பயிற்சிகள் ஒரு பக்கம்அந்தப் பயிற்சிகள் அவரைச் சிறந்த ஒரு கட்டொழுங்கு மனிதனாக மாற்றி அமைத்தன என்று சொன்னால் தப்பு இல்லை. அந்த ஒழுங்குகளைத் தானே நாம் இப்போது அவரிடம் பார்க்க முடிகின்றது

No comments: