Saturday 8 September 2012

கம்யூனிஸ்டுகளின் தொல்லைகள் - 12


கம்யூனிஸ்டுகளின் தொல்லைகள் தாங்க முடியாமல் கூலிம் பக்கம் யாருமே தலை வைத்துப் படுப்பது இல்லை. அதையும் தாண்டிப் போய் டான்ஸ்ரீ சோமா அங்கேயே கிராணியார் பதவியை ஏற்றுக் கொண்டார். அவர் ஒரு துணிச்சல்காரர் என்று தாராளமாகச் சொல்லலாம்

கே.எல்.தேவாசர்
அதற்கும் காரணம் உண்டு. கொஞ்ச நாளைக்கு முன்னால், அந்தப் பதவியில் இருந்த தலைமை எழுத்தரைக் கம்யூனிஸ்டுத் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்தனர். ஆக, சுட்டால் சுடுங்கள் இல்லை வெட்டினால் வெட்டுங்கள் என்ற அசாத்திய துணிச்சலில் பதவியை ஏற்றுக் கொண்டார். தன் குடும்பத்தாரையும் அழைத்து வந்தார்.

மலாயா அவசரகாலத்தில் ஆஸ்திரேலியப் படையினர்
சில மாதங்களுக்குப் பிறகு, தர்மலிங்கம் என்பவரின் நட்பு கிடைத்தது. அவரைத் துணைச் சேர்த்துக் கொண்டு, கூலிமில் ஒரு ..கா கிளையை உருவாக்கினார். அப்போது கே.எல்.தேவாசர் என்பவர் ..காவின் தேசியத் தலைவராக இருந்தார். அதே கிளையின் செயலாளராகவும் பணியாற்றினார். தமிழர்களின் சமூக வளர்ச்சிக்கு அவரும் தர்மலிங்கமும் அயராது உழைத்தனர்

No comments: