Saturday, 15 September 2012

டான்ஸ்ரீ சோமா அரங்கம் - 17


தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி எழுத்தாளர்களுக்குப் பரிசுகள் வழங்கி, மலேசியத் தமிழ் எழுத்துலகத்திற்கு, டான்ஸ்ரீ சோமா நல்ல சேவைகளைச் செய்து வருகின்றார். தமிழ்வேள் கோ.சாரங்கபாணி ‘தமிழர் திருநாள்’ நிகழ்வுகளுக்கு தமிழ் அறிஞர்களை இந்த நாட்டிற்கு அழைத்து வந்து போது, டான்ஸ்ரீ சோமாவும் அவர்களை நன்கு உபசரித்து நிகழ்ச்சிகள் நடத்துவார்.


தமிழை மட்டுமே வீட்டில் பேசிக் கொள்ளும் மலேசியக் குடும்பங்களில் டான்ஸ்ரீ சோமாவின் குடும்பமும் ஒன்று. டான்ஸ்ரீ சோமா அரங்கத்தைப் பற்றி எழுத்தாளர் கே.பாலமுருகன் இப்படி சொல்கிறார். ‘கோலாலம்பூரில் இருப்பவர்களுக்கும் சரி. மற்ற ஊர்களில் இருந்து வருபவர்களுக்கும் சரி. குறிப்பாகத் தமிழர்களுக்கு டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர்.சோமா அரங்கம்தான் அவர்களின் நிகழ்ச்சிகளுக்குப் பயன்படும் மிகச் சிறப்பான இடமாக அமைகின்றது.


அதற்கு மற்றொரு காரணமும் உண்டு. இடத்தைப் பயன்படுத்த விரும்புபவர்கள், நேராக நல்ல மனம் படைத்த டான்ஸ்ரீ டத்தோ சோமசுந்தரம் அவர்களிடமோ, மற்றொரு நல்ல மனிதரான டத்தோ சகாதேவன் அவர்களிடமோ சென்று, எப்படியாவது அந்த மண்டபத்தை வாடகை இல்லாமல் பெற்றுக் கொள்வார்கள். சில நேரங்களில் குறைந்த வாடகை கொடுத்தும் பெற்றுக் கொள்வார்கள்


இந்த நல்ல காரியத்தை அந்த நிர்வாகம் பல வருடங்களாகச் செய்து வருகிறது. அவர்களுக்கு நம் இந்தியச் சமுதாயம், குறிப்பாக நூல் வெளியீடுகள், இலக்கிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் இதர பல நிகழ்ச்சிகள் நடத்தி வரும் கலைஞர்களும் தனியார் இயக்கங்களும் நன்றிக் கடன் பட்டுள்ளனர்.’ என்ன சொலவது. நன்றி டான்ஸ்ரீ! நன்றி சகா!


டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் கே.ஆர். சோமசுந்தரம் - புவான்ஸ்ரீ டத்தின் எஸ். லோகநாயகி தமபதியரின் எண்பதாம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா (சதாபிஷேகம்) 01.03.2010இல் சென்னை அடையாறு சாஸ்திரி நகர் விஜயராஜா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மலேசிய மனங்களின் வாழ்த்துகள்.

சுங்கை சிப்புட் தோட்டத்தில் துன் சம்பந்தனுடன் டான்ஸ்ரீ சோமா
உலகத் தமிழர்களுக்கு நல்லது செய்து வரும் டான்ஸ்ரீ சோமசுந்தரம் அவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். அதுவே மலேசிய இந்தியர்களின் பிரார்த்தனையும்கூட

எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!

விருதுகள் - 16


1996- மாட்சிமை தங்கிய மாமன்னரிடமிருந்து
பி
.எஸ்.எம். எனும் உயரிய டான்ஸ்ரீ விருது.
2007- இந்தியாவின் பிரவாசி பாரதிய சம்மான் விருது
மாட்சிமை தங்கிய பேரரசிடமிருந்து ஏ.எம்.என். விருது
கெடா சுல்தானிடமிருந்து சமாதான நீதிபதி விருது
25.01.2002 - இந்திய நாடாளுமன்ற சபா நாயகர்
பாலயோகி ‘ஹிந்த்ரத்னா’ விருது வழங்குகிறார்.
டத்தோ ஸ்ரீ சாமிவேலு, கலைஞர் கருணாநிதியுடன்

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நூல் வெளியீட்டு விழாவில்

இதர விருதுகள்

1988- சிலாங்கூர் சுல்தானிடமிருந்து டி.பி.எம்.எஸ். எனும் டத்தோ விருது.
2000- ஆஸ்திரேலியா நியூ காசல் பல்கலைக்கழகத்தின் கௌரவர டாக்டர் பட்டம்.

கிளிகாந்திராஜ் - 15

1953 டிசம்பர் மாதம் 11ஆம் தேதி இவருடைய திருமணம் தமிழகம், திருக்கோயிலூரில் நடைபெற்றது. மனைவியின் பெயர் லோகநாயகி. மனம் நிறைந்த மகாலெட்சுமி என்று அவரே பெருமைப் படுகிறார். கூலிம் நகரில் அவரின் இல்லற வாழ்க்கை தொடங்கியது.


தன்னுடைய தாயார் அன்னக்கிளி எனும் பெயரையே தன் பிள்ளைகளுக்கும் சேர்த்து இருக்கிறார். முதல் மகனுக்கு கிளிகாந்திராஜ் எனப் பெயர். தாய்ப் பாசத்தின் பிரதிபலிப்பு அங்கே தெரிகின்றது. அது மட்டும் அல்ல. 1955இல் மகாத்மா காந்திஜி பிறந்த அதே அக்டோபர் 2 இல் தான் இவருடைய மகனும் பிறந்தார்
டான்ஸ்ரீ டத்தின்ஸ்ரீ தம்பதியினர்
தன்னுடைய பிள்ளைகள் அனைவருக்கும் அவர்களின் பெயர்களுக்கு முன்னால், கிளி என்ற பெயரையும் இணைத்து,  அன்னக்கிளி எனும் பெயருக்கு மேலும் இலக்கியச் சிறப்புகளைச் செய்கிறார்.

இப்போது டான்ஸ்ரீ சோமா தலைமை வகிக்கும் தே.நி.நி.கூட்டுறவு சங்கத்திற்கு 19 ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. மொத்த பரப்பளவு 35,000 ஏக்கர்கள் அதாவது 140 சதுர கி.மீ. மேலும் அந்தச் சங்கத்திற்கு 11 துணை நிறுவனங்களும் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளாகச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்
மகன் ரத்தினராஜ் - ஜப்பானிய மனைவி மரிக்கோ,
ஜப்பானிய சம்பந்தி தம்பதியருடன் டான்ஸ்ரீ தம்பதியர்
அந்தச் சங்கத்திற்கு 31 டிசம்பர் 2011வரை 57,757 பங்குதாரர்கள் உள்ளனர். அனைவரும் தோட்டப் பாட்டாளிகள். பெருமைப்பட வேண்டிய விசயம். 1974இல் கூட்டுறவு எனும் மாத இதழைத் தொடங்கினார்.  

கூட்டுறவு மாத இதழ்
கூட்டுறவு, சமூகப் பொருளாதாரம், மொழி, இலக்கியத் துறைகளில் தொடர்ந்து எழுதியும் வருகின்றார். கூட்டுறவு மூலமாக இவர் ஆற்றிய சேவைகளுக்காக பல விருதுகள் கிடைத்து உள்ளன.