Friday, 7 September 2012

சியாம் பர்மா எல்லையில் - 6


தன் பின்னர், மலாயாவின் பல இடங்களில் இராணுவத் தயார்நிலைப் பயிற்சிகள். அவருடைய 20ஆவது வயதில் லெப்டினண்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இந்தச் செய்தி பலருக்குத் தெரியாது
[சான்று: .என்.. ஆவணக்காப்பகம்; பதிப்பு: Jungle alliance, Japan and the Indian National Army / Joyce C. Lebra, Singapore, Donald Moore for Asia Pacific Press,1971] அடுத்து அவர், சிங்கப்பூரில் இருக்கும் அசாட் இராணுவப் பயிற்சிக் கல்லூரிக்குப் பயிற்றுநராக அனுப்பப்பட்டார்

போர் முனையில் ஜான்சி ராணி படையைச் சேர்ந்த பெண்மணி

சில மாதங்களுக்குப் பிறகு, ஆசாத் ஹிந்த் சர்க்கார் சுதந்திர அரசாங்கத்திலும் பங்கு வகித்தார். அடுத்து இந்திய தேசிய இராணுவத்தின் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரை சியாம் பர்மா எல்லையில் இருக்கும் இம்பால், கோகிமாவிற்கு அனுப்பினார்கள்.  
ஜான்சிராணி படையினரின் அணிவகுப்பு
இதில் ஜான்சி ராணி படையினரும் போர் முனைக்கு அனுப்பப்பட்டனர். பெண்கள் பிரிவிற்கு லட்சுமி சுவாமிநாதன், ஜானகி ஆதிநாகப்பன் தலைமை தாங்கினார்கள். இந்திய தேசிய இராணுவத்தினர் அடர்ந்த காடுகளில் வெள்ளையர்களுக்கு எதிராகத் துப்பாக்கிகளைத் தூக்கினர்.  

ஜான்சிராணி படையினரின் அணிவகுப்பு
அவை எல்லாம் அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அத்தியாயங்கள். பாம்புக்கடி, பூரான்கடி, மலேரியாக் கொசுக்கடிகளில் இருந்து தப்பித்து வந்தவர்கள். பசி பட்டினியால் உருக்குலைந்து போனவர்கள். உடல் வேதனையின் உச்சிக்கே போய் வந்தவர்கள். அதில் சோமசுந்தரம் என்கிற சாமான்ய மனிதரையும் சேர்க்க வேண்டும்.

No comments: