Saturday, 15 September 2012

கிளிகாந்திராஜ் - 15

1953 டிசம்பர் மாதம் 11ஆம் தேதி இவருடைய திருமணம் தமிழகம், திருக்கோயிலூரில் நடைபெற்றது. மனைவியின் பெயர் லோகநாயகி. மனம் நிறைந்த மகாலெட்சுமி என்று அவரே பெருமைப் படுகிறார். கூலிம் நகரில் அவரின் இல்லற வாழ்க்கை தொடங்கியது.


தன்னுடைய தாயார் அன்னக்கிளி எனும் பெயரையே தன் பிள்ளைகளுக்கும் சேர்த்து இருக்கிறார். முதல் மகனுக்கு கிளிகாந்திராஜ் எனப் பெயர். தாய்ப் பாசத்தின் பிரதிபலிப்பு அங்கே தெரிகின்றது. அது மட்டும் அல்ல. 1955இல் மகாத்மா காந்திஜி பிறந்த அதே அக்டோபர் 2 இல் தான் இவருடைய மகனும் பிறந்தார்
டான்ஸ்ரீ டத்தின்ஸ்ரீ தம்பதியினர்
தன்னுடைய பிள்ளைகள் அனைவருக்கும் அவர்களின் பெயர்களுக்கு முன்னால், கிளி என்ற பெயரையும் இணைத்து,  அன்னக்கிளி எனும் பெயருக்கு மேலும் இலக்கியச் சிறப்புகளைச் செய்கிறார்.

இப்போது டான்ஸ்ரீ சோமா தலைமை வகிக்கும் தே.நி.நி.கூட்டுறவு சங்கத்திற்கு 19 ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. மொத்த பரப்பளவு 35,000 ஏக்கர்கள் அதாவது 140 சதுர கி.மீ. மேலும் அந்தச் சங்கத்திற்கு 11 துணை நிறுவனங்களும் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளாகச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்
மகன் ரத்தினராஜ் - ஜப்பானிய மனைவி மரிக்கோ,
ஜப்பானிய சம்பந்தி தம்பதியருடன் டான்ஸ்ரீ தம்பதியர்
அந்தச் சங்கத்திற்கு 31 டிசம்பர் 2011வரை 57,757 பங்குதாரர்கள் உள்ளனர். அனைவரும் தோட்டப் பாட்டாளிகள். பெருமைப்பட வேண்டிய விசயம். 1974இல் கூட்டுறவு எனும் மாத இதழைத் தொடங்கினார்.  

கூட்டுறவு மாத இதழ்
கூட்டுறவு, சமூகப் பொருளாதாரம், மொழி, இலக்கியத் துறைகளில் தொடர்ந்து எழுதியும் வருகின்றார். கூட்டுறவு மூலமாக இவர் ஆற்றிய சேவைகளுக்காக பல விருதுகள் கிடைத்து உள்ளன.

No comments: